தேனி உழவர் சந்தை பகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தேனி: தேனியில் நடைபயிற்சி சென்று பொதுமக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதே நேரத்தில் பிரசாரத்திற்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளது. அதாவது 17ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம் ஓய்கிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேனியில் நடைபயிற்சி சென்று பொதுமக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தேனி கான்வென்ட் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள உழவர் சந்தை வரை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தேனி உழவர் சந்தை பகுதியில் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்களுக்கு கை கொடுத்து வாக்கு சேகரித்தார். உழவர் சந்தை பகுதியில் வழிநெடுக திரண்ட ஏராளமானோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்

இதனிடையே தேனி, திண்டுக்கல் தொகுதியின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். தேனி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் வேட்பாளர் சச்சிதானந்தத்துக்கு வாக்கு சேகரிக்கிறார்.

The post தேனி உழவர் சந்தை பகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: