ஏ.சி.சண்முகம் விரட்டியடிப்பு

வேலூர் மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக, தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்க, குடியாத்தம் கூட்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒரு சமுதாய சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இதற்கு அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மாநில தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி பேசுகையில், ‘குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, தற்போது தனி தொகுதியாக உள்ளது. ஏ.சி.சண்முகம் வெற்றி பெற்ற பிறகு பொது தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இந்த கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உறுதியளித்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, அந்த சங்க உறுப்பினர்கள் சிலர் அங்கு வந்து, சமுதாய ரீதியாக ஓட்டு கேட்க கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளு, முள்ளு நடந்தது. இதையடுத்து ஆலோசனை கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு செல்வராஜ் மற்றும் ஏ.சி.சண்முகம் விரட்டியடிக்கப்பட்டனர். இதையடுத்து புதிய நீதி கட்சி நிர்வாகிகள் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அனுமதி இல்லாமல் கூட்டம் நடந்ததாக, குடியாத்தம் டவுன் போலீசார், தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஏ.சி.சண்முகம் விரட்டியடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: