நாகப்பட்டினம் தேர்தல் பிரசாரத்தில் கம்யூ. எம்பி.யை ஒருமையில் பேசிய நாம் தமிழர் பெண் வேட்பாளர்: வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி கீழ்வேளூர் கடைதெருவில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா நேற்று பிரசாரம் செய்தார். அப்போது நாகப்பட்டினம் எம்பி செல்வராசு கடந்த 5 ஆண்டு காலத்தில் இந்த தொகுதிக்கு என்ன செய்தார் என கேட்டு அவரை ஒருமையில் பேசினார். தொடர்ந்து அதேபோல் பேசியதால் ஆத்திரம் அடைந்து ஒன்று கூடிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ‘‘வெளி மாவட்டத்தில் இருந்து வந்து இங்கு தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்.

நாகப்பட்டினத்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். ஓட்டு மட்டுமே கேட்க வேண்டும். அதை விட்டு எங்கள் கட்சி எம்பியை விமர்சனம் செய்யக்கூடாது,’ என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். அப்போது நாம் தமிழர் கட்சியினருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அது கை கலப்பாக மாறும் நிலை ஏற்பட்டது.

ஆனால் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் எதை பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து ஒருமையில் பேசினார். இதையடுது அங்கு வந்த போலீசார் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பொதுவெளியில் பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர் ஒருவர் சிட்டிங் எம்.பி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரை ஒருமையில் அறுவறுக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post நாகப்பட்டினம் தேர்தல் பிரசாரத்தில் கம்யூ. எம்பி.யை ஒருமையில் பேசிய நாம் தமிழர் பெண் வேட்பாளர்: வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: