கர்நாடகாவில் 8க்கே வாய்ப்பில்ல ராஜா: பா.ஜவுக்கு 200 தொகுதி கூட கிடைக்காது; கார்கே மகன் கருத்து

பெங்களூரு: மக்களவை தேர்தலில் தேசியளவில் பாஜ 200 தொகுதிகளில் கூட ஜெயிக்காது என்றும் கர்நாடக மாநிலத்தில் 8 இடங்கள் கூட வாய்ப்பில்லை என்றும் ஆர்.எஸ்.எஸ் சர்வே தெரிவிப்பதாக அமைச்சர் பிரியாங்க் கார்கே தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 29 தொகுதிககளில் 8 தொகுதிகளில் கூட பாஜ வெற்றி பெறாது என்று ஆர்.எஸ்.எஸ் சர்வே தெரிவிப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே மகனும், கர்நாடகா அமைச்சருமான பிரியாங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அமைச்சர் பிரியாங்க் கார்கே, ‘ஆர்.எஸ்.எஸ் சர்வேயின் படி, பாஜ தேசியளவில் 200 தொகுதிகளில் கூட ஜெயிக்காது என்று தெரியவந்துள்ளது. கர்நாடகாவில் 8 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்க வாய்ப்பில்லை. மாநிலத்தில் 14-15 தொகுதிகளில் அவர்கள் கட்சிக்குள்ளேயே பிரச்னை இருக்கிறது.

அப்படியிருக்கையில், பாஜ எப்படி ஜெயிக்க முடியும்? பாஜவை சுத்தப்படுத்த வேண்டும் என்று அக்கட்சி தலைவர்களே கூறுகின்றனர். கர்நாடக பாஜ ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தால் மோசமான நிலையில் இருப்பதாக பாஜ தலைவர்களே அதிருப்தியில் உள்ளனர். அவர்களே கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்று பேசுகின்றனர். இதையெல்லாம் நாங்களா சொல்கிறோம்? அவர்களுக்குள்ளேயே அவர்கள் அடித்துக் கொள்கிறார்களே தவிர, காங்கிரஸ் இதை உருவாக்கவில்லை’ என்றார்.

The post கர்நாடகாவில் 8க்கே வாய்ப்பில்ல ராஜா: பா.ஜவுக்கு 200 தொகுதி கூட கிடைக்காது; கார்கே மகன் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: