மயிலாடுதுறையில் 5வது நாளாக போக்கு காட்டி வரும் சிறுத்தையின் புகைப்படம் சிக்கியது..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் போக்கு காட்டி வரும் சிறுத்தையின் புகைப்படம் வெளியாகி உள்ளது. 5வது நாளாக சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதல் நாள் கண்காணிப்பு கேமராவில் சிக்கிய சிறுத்தையின் புகைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சிவனத்துறையின் கேமராவில் சிறுத்தை சிக்கவில்லை. இதனிடையே, நேற்று சித்தர்க்காட்டில் உள்ள தண்டபாணி செட்டி தெருவில் ஆடு ஒன்று கடித்து குதறிய நிலையில் உயிரிழந்து கிடந்தது. உயிரிழந்த ஆட்டை நேரில் பார்வையிட்டு வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இன்று மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே மேலும் ஒரு ஆட்டை சிறுத்தை அடித்துக் கொன்றது. வேட்டையாடப்பட்ட ஆட்டின் பாகங்களை வனத்துறையினர், போலீசார் நேரில் பார்வையிட்டனர். இந்நிலையில், மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட ஆடு சிறுத்தை கொல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. நாய் கடித்து அந்த ஆடு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து நிபுணத்துவம் வாய்ந்த வன ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். வனத்துறை ஊழியர்கள் பொம்மன் மற்றும் மீன் காளான் ஆகிய இருவரும் வரவழைக்கப்பட்டனர்.

வன ஊழியர்கள் இருவரும் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடிய விரைவில் சிறுத்தை சிக்கும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். விரைவில் சிறுத்தை புலி பிடிக்கப்படும். பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். ஆதலால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்திருப்பது நினைவுகூரத்தக்கது.

The post மயிலாடுதுறையில் 5வது நாளாக போக்கு காட்டி வரும் சிறுத்தையின் புகைப்படம் சிக்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: