மன்னார்குடி, ஏப். 6: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனி பிரமோற்சவ பெரு விழாவின் 10 ம் நாளான நேற்று அகமுடையார் சமூகத் தின் ஏற்பாட்டில் பெருமாள் வேணு கோபாலன் அலங்காரத்தில் தங்க சூர்ய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர் களுக்கு சேவை சாதித்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழகத்தில் புகழ் பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான ராஜகோபால சுவாமி கோயிலில் 18 நாள் பங்குனி பிரமோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
பங்குனி பிரமோற்சவ பெருவிழாவின் 10ம் நாளான நேற்று உற்சவர் பெரு மாள் பல்லக்கு சேவையில் கோயி லிருந்து புறப்பட்டு நான்கு வெளி ராஜவீதி களின் வழியாக யானை வாகன மண்டபத்திற்கு வந்தடைந்தார். அங்கு பெரு மாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், அகமுடையார் சமூகத்தின் ஏற்பாட்டில் பெருமாள் வேணுகோபாலன் அலங்காரத்தில் தங்க சூர்யபிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களு க்கு அருள்பாலித்தார்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் கருடர் இளவரசன், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் மாதவன், அறங்காவ லர் குழு உறுப்பினர்கள், மண்டகபடிதாரர்கள், ஊழியர்கள் மற்றும் தீட்சிதர்கள் செய்திருந்தனர்.
The post பங்குனி பிரமோற்சவ 10ம் நாள் விழா தங்க சூர்யபிரபை வாகனத்தில் பெருமாள் சேவை appeared first on Dinakaran.