வாக்களிக்க எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்

 

நாமக்கல் ஏப்.6: நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க எடுத்துச்செல்ல வேண்டிய ஆவணங்கள் குறித்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல், வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவின் போது, வாக்காளர்கள் தங்களின் அடையாளத்தை மெய்ப்பிக்க, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை வாக்கு சாவடியில் காண்பிக்க வேண்டும்.

வாக்காளர் அட்டையை அளிக்க முடியாதவர்கள், தங்களின் அடையாளத்தை மெய்ப்பிக்க 12 வகையான ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, அதன் விபரம்; 1. ஆதார் அட்டை 2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை 3. போட்டோவுடன் கூடிய பேங்க் மற்றும் போஸ்ட் ஆபீஸ் பாஸ் புத்தகங்கள் 4. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ இன்சூரன்ஸ் அடையாள அட்டை 5. டிரைவிங் லைசென்ஸ்

6. பான் கார்டு 7. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு. 8. இந்திய பாஸ்போர்ட் 9. போட்டோவுடன் கூடிய பென்சனர் சர்டிபிகேட் 10. மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட போட்டோவுடன் கூடிய பணி அடையாள அட்டைகள் 11. எம்எல்ஏ, எம்பிக்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகள், 12. இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை, உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை, வாக்காளர்கள் எடுத்துச்சென்று, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் காண்பித்து ஓட்டுப்போடலாம். இத்தகவலை கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

The post வாக்களிக்க எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள் appeared first on Dinakaran.

Related Stories: