பெண்களுக்கு எதிரான குற்றம் டிவிட்டரில் கண்டனம் போடுவேன்… ரோட்டில் போராட மாட்டேன்… நடிகை குஷ்பு சர்ச்சை

வேலூர்: வேலூர் நாடாளுமன்ற தொகுதி பாஜ கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம், பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர், நடிகை குஷ்பு ஆகியோர் வேலூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: குஷ்பு மகளிர் ஆணைய உறுப்பினர் ஆவதற்கு முன்னர், எத்தனை பேர் மகளிர் ஆணையத்தை பற்றி பேசியுள்ளீர்கள். மகளிர் ஆணையம் இருப்பதை பற்றி தமிழ்நாட்டில் யாருக்காவது தெரியுமா? குஷ்பு வந்தவுடன் எல்லாவற்றையும் கையில் எடுக்க முடியாது. எனக்கு மேலே அதிகாரிகள் உள்ளனர். உண்மையான வழக்கு, பொய்யான வழக்கு என்று பார்த்துதான் முடிவு எடுக்க முடியும். நான் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்து வருகிறேன். தெருவில் நின்று போராட முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர். பாஜ ஆளும் மணிப்பூர் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் மற்றும் பாஜ நிர்வாகிகள் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக செய்யும் குற்றங்கள் குறித்து நடிகை குஷ்பு மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்து வாய் திறப்பதில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. இந்த சூழலில் டிவிட்டரில்தான் கண்டனம் தெரிவிப்பேன். ரோட்டில் போராட முடியாது என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

The post பெண்களுக்கு எதிரான குற்றம் டிவிட்டரில் கண்டனம் போடுவேன்… ரோட்டில் போராட மாட்டேன்… நடிகை குஷ்பு சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: