உடன்குடி, ஏப். 5: உடன்குடியில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடன்குடி புதுமனை ரோட்டைச் சேர்ந்தவர் முத்துச்செல்வன்(33). குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தரிசன டிக்கெட் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது பைக்கை காணவில்லை. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதில், இருசக்கர வாகனத்தை திருடியது குலசேகரன்பட்டினம் தியாகராஜபுரம் கணேசன் மகன் பட்டுத்துரை என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
The post உடன்குடியில் பைக் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.