டோக்கியோ : ஜப்பானின் ஹோன்ஷு கிழக்கு கடற்கரைக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. தைவானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.