முத்துப்பேட்டை அரசு சாஹீப் பள்ளி வாசல் கந்தூரி விழா ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டு மனு

முத்துப்பேட்டை, ஏப். 4: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தெற்கு தெரு அரபு சாகிப் பள்ளி வாசல் 536வது வருட கந்தூரி ஊர்வலம், ரம்ஜான் மறுநாள் ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் கந்தூரி விழா நடைபெறுவது குறித்து நேற்று திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழ்மணியை கந்தூரி கமிட்டியின் தலைவர் காதர் சுல்தான் சந்தித்து மனு ஒன்று கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ரம்ஜான் முடிந்த மறுநாள் தெற்கு தெரு பள்ளிவாசலிருந்து மாலை 5 மணிக்கு கந்தூரி ஊர்வலம் புறப்பட்டு அரக்காசு அம்மா தர்கா சென்றடைந்து. பிறகு பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் அதே வழியில் திரும்பி குத்பா பள்ளிவாசல் வழியாக தெற்குத் தெரு பள்ளிவாசலை வந்தடையும். எனவே கந்தூரி ஊர்வலத்திற்கு அனுமதியும் தேவையான பாதுகாப்புகளையும் வழங்கும்படி கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்.

The post முத்துப்பேட்டை அரசு சாஹீப் பள்ளி வாசல் கந்தூரி விழா ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டு மனு appeared first on Dinakaran.

Related Stories: