குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரி வாக்குகள் எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்

தஞ்சாவூர், ஏப். 4: தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தினை தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுப் பார்வையாளர் (General Observer) கிகேட்டோ சேம மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலுக்கு தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமாக குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இக்கல்லூரி வளாகத்தில் மன்னார்குடி. திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கிய வாக்கு எண்ணும் மையத்திற்கான பூர்வாங்கப் பணி மேற்கொள்ளவுள்ளதை தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள பொதுப்பார்வையாளருடன் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் காவல் துறை, தீயணைப்பு துறை, பொதுப் பணித்துறை போன்ற துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரி வாக்குகள் எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: