நாடு முழுவதும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 25 கட்சிகள் இப்போது காணாமல் போய்விட்டது. டெல்லி முதலமைச்சரை சிறையில் அடைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை மூலம் நெருக்கடி கொடுக்கிறார்கள். தேர்தல் பத்திரம் உள்ளிட்ட தகவல்கள் வெளியில் வந்த பிறகு, பணம் பணம் என்பதை மட்டுமே இலக்காக வைத்து 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்தியுள்ளனர். ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பிணமாகத்தான் இருக்கிறது. இந்த பாஜ கட்சி ஆட்சி அமைந்தால் எதிர்காலம் சுடுகாடு தான். இதெல்லாம் வென்று விடுவோம் என்ற தில்லோடு இருப்பவர்கள் செய்யும் செயலா இது?. பயத்தில் இருப்பவர்கள் செய்யும் செயல் இது. இவ்வாறு பேசினார்.
The post பாஜ வாஷிங் மெஷினில் சேர்த்தால் மகா ஊழல்வாதிகளின் அனைத்து வழக்குகளும் ஆவியாகி விடும்: அமைச்சர் ‘நக்கல்’ appeared first on Dinakaran.
