ஒன்றிய அரசு கள்ள ஓட்டு போடும்: பிரேமலதா எச்சரிக்கை

வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் பசுபதியை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘நான் இந்த தொகுதியை சேர்ந்தவர். கேப்டன் விஜயகாந்த் குடியாத்தத்தின் மருமகன். கேப்டன் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அவரது நினைவிடம், வீடு என இருந்தேன். தற்போது தான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்களிக்கவில்லை என்றால் ஒன்றிய அரசு அவர்களின் செல்வாக்கு அதிகாரத்தை பயன்படுத்தி போலி வாக்கு செலுத்தி விடுவார்கள். அதிமுக வேட்பாளர் பசுபதி வெற்றி பெற்றால் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பார்’ என்றார்.

The post ஒன்றிய அரசு கள்ள ஓட்டு போடும்: பிரேமலதா எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: