நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது தென்சென்னை மக்களுக்கு பூங்காக்களை அமைத்து கொடுத்தேன்: தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பிரசாரம்

சென்னை: தென்சென்னைநாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது தென்சென்னை மக்களுக்கு பூங்காக்களை அமைத்து கொடுத்தேன் என தென்சென்னை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தெரிவித்தார். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் இன்று காலை விருகம்பாக்கம் தொகுதியில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:
நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது ஒன்றிய அரசை வலியுறுத்தி அம்ருத் திட்டத்தின் மூலமாக நிதி பெற வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் கொடுத்து ஒன்றிய நகர்புற அமைச்சரை சந்தித்து நடவடிக்கை எடுத்து அதன் காரணமாக அம்ருத் திட்டத்திற்கு தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பல்வேறு பூங்காக்கள் அமைப்பதற்கு நிதி பெறப்பட்டு, பூங்காக்கள் அமைக்கப்பட்டது. சிதிலமடைந்த பூங்காக்கள் மறுசீரமைக்கப்பட்டது. அதனால் பொதுமக்கள் பயன்பெற்றனர்.

மேலும், அம்ருத் திட்டத்தின் மூலமாக குடிநீர் தேவையை குறைப்பதற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்குவதன் மூலம் தொழிற்சாலைகளுக்கு தேவையான நீரை பூர்த்தி செய்யும் என்ற விதத்தில், ஒட்டுமொத்தமாக தண்ணீரின் தேவை குறைக்கப்படும் என்பதற்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி, அதற்காக வலியுறுத்தப்பட்டு நிதி பெறப்பட்டது. கோயம்பேட்டில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இதனால் தென்சென்னையில் உள்ள மக்களுக்கு அதிகளவில் தண்ணீர் கிடைக்கிறது. இவ்வாறு கூறினார்.

The post நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது தென்சென்னை மக்களுக்கு பூங்காக்களை அமைத்து கொடுத்தேன்: தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: