×

அதிமுக எம்.எல்.ஏ., நடிகர் மீது வழக்கு

கன்னியாகுமரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத்தை ஆதரித்து, நடிகர் சிங்கமுத்து நேற்று முன் தினம் ஆரல்வாய்மொழி காந்தி நகர் பகுதியில் பிரசாரம் செய்தார். இதில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. உள்பட பலர் பங்கேற்றனர். சுமார் 300 பேர் வரை கூடி இருந்தனர்.

தேர்தல் விதிமுறை மீறி முறையான அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த கூட்டம் நடந்ததாக, தேர்தல் பறக்கும்படை அலுவலர் ராஜசேகர், ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நடிகர் சிங்கமுத்து உள்பட சுமார் 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 143, 341, 188 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post அதிமுக எம்.எல்.ஏ., நடிகர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : AIADMK MLA ,AIADMK ,Basilian Nazareth ,Kanyakumari ,Lok Sabha ,Singhamuthu ,Aralwaimozhi Gandhi Nagar ,Thalavaisundaram ,MLA ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்