தேனி, ஜூலை 24: மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக்கோரி தேனியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தேனி நகர் பங்களா மேட்டில், மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் தலைமை தாங்கினார்.
தேனி நகர் செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தேனி நகர் நிர்வாகிகள் சுந்தரபாண்டியன், முருகேசன், வீரமணி, கண்ணன், ராதாகிருஷ்ணன், லட்சுமி, பாக்கியம், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், முத்துகிருஷ்ணன் ஜெயப்பிரகாஷ், தனலட்சுமி தினேஷ்குமார், சுரேஷ், ஈஸ்வரன், பாலசுப்பிரமணியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.