முத்துப்பேட்டை அருகே அரசு நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கல்வி சுற்றுலா

முத்துப்பேட்டை, ஏப்.2: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் காடுவெட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சார்பில் உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் சக மாணவர்களை அழைத்துக்கொண்டு கண்டுனர் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது. இதில் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், அண்ணா கோளரங்கம், விமான நிலையம், கல்லணை, தஞ்சாவூர் பெரியகோயில் என தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற வழிபாட்டு தலங்கள், சுற்றுலாதலம் உள்பட பகுதிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 91 மாணவர்களை அழைத்துச்சென்று அதன் சிறப்புகளையும், அதன் வரலாறுகளை எடுத்துக்கூறினர். மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதிலும் கோளரங்கத்தில் கோள்கள் இயக்கம் மற்றும் 3டி காட்சியை மிக்க ஆர்வத்தோடும் மாணவ, மாணவிகள் கண்டுகளித்தனர். கல்லணையையும், தஞ்சாவூர் பெரியகோயில் கட்டுமானத்தையும் எண்ணி வியந்தனர். தலைமை ஆசிரியர் முருகேசன் மற்றும் ஆசிரியர்கள் அருளானந்தம், முருகையன், உமாராணி, அன்புச்செல்வி, சிந்துஜா, பாமா ஆகியோர் மாணவர்களுடன் சென்றனர். இந்த கல்வி கண்டுனர் சுற்றுலா தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

The post முத்துப்பேட்டை அருகே அரசு நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கல்வி சுற்றுலா appeared first on Dinakaran.

Related Stories: