நாகை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் அடிப்படை வசதிகள் மயிலாடுதுறையில் ராணுவத்தினருக்கு தபால் வாக்குகள் வழங்கும் பணி தேர்தல் பொது பார்வையாளர் முன்னிலையில் நடந்தது

மயிலாடுதுறை, ஏப். 2: மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் ராணுவத்தினர் தபால் வாக்களிக்க தேர்தல் ஆணையத்தின் இணையதள செயலி வழியாக தபால் வாக்குகள் வழங்கும் பணிகள் மாவட்ட கலெக்டர் மாவட்ட தேர்தல் அலுவலர் மகாபாரதி தலைமையில் தேர்தல் பார்வையாளர்(பொது) கன்ஹீராஜ் ஹச் பகதே முன்னிலையில் நடைபெற்றது. மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் எதிர்வரும் 19.4.2024 அன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வரும் ராணுவத்தினர் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் ஆணையத்தின் இணையதள செயலி வழியாக தபால் வாக்குகள் வழங்கும் பணிகள் மாவட்ட கலெக்டர் தலைமையில், தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 64 வாக்காளர்களும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 103 வாக்காளர்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 83 வாக்காளர்களும், சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 112 வாக்காளர்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 72 வாக்காளர்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 73 வாக்காளர்களும் ஆக மொத்தம் ராணுவத்தில் பணியாற்றும் 507 வாக்காளர்கள் இத்தேர்தலில் தபால் வாக்களிக்க உள்ளனர். இதில் டி ஆர் ஓ மணிமேகலை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post நாகை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் அடிப்படை வசதிகள் மயிலாடுதுறையில் ராணுவத்தினருக்கு தபால் வாக்குகள் வழங்கும் பணி தேர்தல் பொது பார்வையாளர் முன்னிலையில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: