தஞ்சாவூர், மார்ச் 30: தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் தமிழ்நாடு சலவை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். மாநிலத் தலைவர் செல்லையா தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ஜெயராஜ், மாநிலத் துணைத் தலைவர்கள் பொன் சந்திரன், ராமமூர்த்தி, பொதுச் செயலாளர் கோகுலதாஸ், மாநில துணை செயலாளர் ராஜதுரை முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில, மாவட்ட, நகர கிளைச் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மாநில சங்கம் தெரிவிக்கும் கட்சிக்கு வாக்களிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திருக்காட்டுப்பள்ளி நகர தலைவர் துரைக்கண்ணு நன்றி கூறினார்.
The post சலவை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் appeared first on Dinakaran.