கீழ்வேளூர் வல்லாங்குளத்து முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

 

கீழ்வேளூர், மார்ச் 25: நாகை மாவட்டம் கீழ்வேளூர் வல்லாங்குளத்து முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 20ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையாக சாலை பூஜை தொடங்கியது. 21ம் தேதிகாலை நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், மகா கணபதி ஹோமமும் இரவு வாஸ்து சாந்தி, பிரவேச பலி நடைபெற்றது. 22ம் தேதி காலை அட்சலிங்க சுவாமி கோயில் சரவணா பொய்கை குளத்தில் இருந்து புனித நீர் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், யாகசாலை கலச ஸ்தாபனம் நிகழ்ச்சி நடைபெற்று மாலை அம்பாள் யாகசாலை பிரவேசம் நடைபெற்று முதல் காலையாக பூஜை நடைபெற்றது.

23ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், இரவு மூன்றாம் கால யாக பூஜை மற்றும் மருந்து சாற்றுதல் நடைபெற்று பூர்ணாஹீதி தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை ரஷா பந்தனம், நாடி சந்தானம் நடைபெற்று நான்காம் கால யாக பூஜை பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்று, கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேம் செய்து வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து மகா அபிஷேகமும், இரவு அம்பாள் வீதி உலா காட்சி நடைபெற்றது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கிராம சமுதாயம் மற்று திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.

 

The post கீழ்வேளூர் வல்லாங்குளத்து முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: