கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 5 பேர் கைது

சென்னை: சென்னை, சேப்பாக்கம், எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்ச் அணிகளுக்கிடையே ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி இரவு ஆட்டமாக நடைபெற்றது. இதற்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பதை தடுக்க சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், உயர் அதிகாரிகள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை சுற்றியுள்ள பட்டாபிராம் கேட், பெல்ஸ் ரோடு, வாலாஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்ற வினோத்குமார் (36), அசோக் குமார் (21), இம்மானுவேல் (30), ரூபன் ரமேஷ் (26), சரவணன் (27), ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 டிக்கெட்டுகள் மற்றும் ₹31,500த்தை பறிமுதல் செய்தனர்.

The post கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: