ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிக்க மாணவிகள் நூறு வடிவத்தில் நின்று விழிப்புணர்வு

 

ஜெயங்கொண்டம், மார்ச் 21: ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நூறு வடிவத்தில் நின்று 100 சதவீதம் வாக்களிக்க மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் பெரும்பான்மையினர் 18 வயது முடிந்தவர்களாக இருப்பார்கள், 18 வயது முடிந்தவர்கள் வாக்காளர்கள் பட்டியலில் அவசியம் பெயர்களை சேர்த்திருக்க வேண்டும். அவ்வாறு பெயர்கள் சேர்த்து இருப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக விலை போகாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பேராசிரியர்கள் அறிவுறுத்தினர். விழிப்புணர்வு கருத்தரங்கத்தின் முடிவில் கல்லூரி மாணவ மாணவர்களாகிய நாங்கள் 100% வாக்களிப்போம் என உறுதி எடுத்துக் கொண்டு 100% என்பதற்கு 100 என்ற எண் வடிவில் மாணவிகள் நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

The post ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிக்க மாணவிகள் நூறு வடிவத்தில் நின்று விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: