மியாமி ஓபன் டென்னிஸ்: சிமோனா ஹாலெப்பை வீழ்த்திய படோசா

மியாமி: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில், 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்று போட்டியில் ருமேனியாவின் 32 வயதான சிமோனா ஹாலெப், ஸ்பெயினின் 26 வயதான பவுலா படோசாவுடன் மோதினார். ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 2 ஆண்டுக்கு பின் களம் இறங்கிய சிமோனா முதல் செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றினார். ஆனால் அடுத்த 2 செட்டையும் 6-4,6-3 என படோசா கைப்பற்றி 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.

டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-1, 6-4 என பிரான்சின் கிளாரா புரலையும், கஸ்கஸ்தானின் யூலியா புடின்ட்சேவா 6-2,3-6,6-4 என ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்ஸாவையும், உக்ரைனின் லெசியா சுரென்கோ, 2-6,6-1,6-4 என போலந்தின் மக்டா லினெட்டையும் வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தனர். பிரான்சின் டயான் பாரி, 7-6,6-2 என ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனையும், செக்குடியரசின் கேட்ரினா சினியாகோவா, 6-2,6-4 என ருமேனியாவின் அனா போக்டனையும் வென்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தனர்.

The post மியாமி ஓபன் டென்னிஸ்: சிமோனா ஹாலெப்பை வீழ்த்திய படோசா appeared first on Dinakaran.

Related Stories: