களைகட்டும் தேர்தல் திருவிழா: கூட்டணி கட்சிகளுடன் அதிமுக இன்று ஒப்பந்தம்?

சென்னை: மக்களவை தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக இன்று தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி தலைமையிலான கூட்டணிகள் போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி தமிழகத்தில் உருவாகியுள்ளது. இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் திமுக இன்று வேட்பாளர்களை அறிவிக்கிறது. அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்கிறது. அதன்படி மக்களவை தேர்தலில் கூட்டணி தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

பேச்சுவார்த்தையின் முடிவில் அதிமுக – தேமுதிக இடையேயான கூட்டணி இன்று உறுதியாகும் என கூறப்படுகிறது. பாஜகவுடன் பாமக சென்ற நிலையில் தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிகவுக்கு 4 அல்லது 5 தொகுதிகள் வரை அதிமுக ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் அதிமுக இன்று தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய தமிழகம் கட்சி, எஸ்டிபிஐ, புரட்சி பாரதம் கட்சி, ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளுடன் காலை 10 மணிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. கூட்டணி ஒப்பந்தத்துக்கு பிறகு அதிமுக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது

The post களைகட்டும் தேர்தல் திருவிழா: கூட்டணி கட்சிகளுடன் அதிமுக இன்று ஒப்பந்தம்? appeared first on Dinakaran.

Related Stories: