ஆவடி அருகே 600 போதை மாத்திரை, 4 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆவடி: ஆவடியில் கடந்த வாரம் 15,000 நைட்ரோ விட் மாத்திரைகளை பேருந்தில் கடத்திச் சென்ற மூவரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். இதில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் உதவியுடன் இருவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர்கள் கூறிய தகவல்களை வைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, ஆவடி துணை ஆணையர் அய்மான் ஜமால் தலைமையில் சோழவரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான கிருஷ்ணகாந்த் (25) என்பவரது வீட்டை நேற்று அதிகாலையில் சோதனை செய்தபோது, அங்கு நைட்ரோவிட் போதை மாத்திரையை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, ஆவடி காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் (20), காட்டூர் அமித்ராபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (19) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்களிடமிருந்து 600 போதை மாத்திரைகள் மற்றும் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post ஆவடி அருகே 600 போதை மாத்திரை, 4 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: