வண்டலூர் அருகே கல்லூரி மாணவர் திடீர் மாயம்


கூடுவாஞ்சேரி: வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர், கலைஞர் தெருவை சேர்ந்தவர் கோபால் (45), இவருக்கு மனைவி பூர்ணிமா (42), மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் கவியரசன் (19) வண்டலூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பியவர், மாலை 7 மணி அளவில் அவரது பாட்டியின் செல்போனை வாங்கி கொண்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.  இதுகுறித்து கோபால் தாழம்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில், தாழம்பூர் போலீஸ் எஸ்ஐ தியாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

The post வண்டலூர் அருகே கல்லூரி மாணவர் திடீர் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: