ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை டிராபி டூர் நியூயார்க்கில் தொடக்கம்!!

நியூயார்க்: ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை டிராபி டூர் நியூயார்க்கில் தொடங்கப்பட்டது. இரண்டு முறை டி20 உலகக் கோப்பை சாம்பியனான கிறிஸ் கெய்ல் மற்றும் யுஎஸ்ஏ பந்துவீச்சாளர் அலி கான் ஆகியோர் நியூயார்க்கில் டிராபி சுற்றுப்பயணத்தைத் தொடங்கினர்.

ஆடவர் டி20 உலகக் கோப்பையின் ஒன்பதாவது பதிப்பு 1 ஜூன் 2024 அன்று தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது. இது அமெரிக்காவில் நடைபெறும் முதல் ஐசிசி தொடராகும். டி20 உலகக் கோப்பை சுற்றுப்பயணத்தின் அதிகாரப்பூர்வ துவக்கம் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் நடைபெற்றது.

டி20 உலகக் கோப்பை தொடர் நியூயார்க் 8 போட்டிகள் நடைபெறும் மற்ற இரண்டு மைதானங்கள் தலா 4 போட்டிகள் நடைபெறும். மேற்கிந்தியத் தீவுகளில் ஆன்டிகுவா மற்றும் பார்புடா, பார்படாஸ், கயானா, செயிண்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ போன்ற மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்.

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024 தொடங்க இன்னும் மூன்று மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ளது. அமெரிக்காவில் கிரிக்கெட்டில் ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. கிரிக்கெட்டுக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இதன் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் உலகக் கோப்பையை நெருங்கிப் பார்க்கும் வாய்ப்பை முடிந்தவரை பலருக்கு வழங்கும் நோக்கில் டிராபி டூர் தொடங்கியுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. டிராபி சுற்றுப்பயணம் நான்கு கண்டங்களில் உள்ள 15 நாடுகளை சென்றடையும்.

The post ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை டிராபி டூர் நியூயார்க்கில் தொடக்கம்!! appeared first on Dinakaran.

Related Stories: