நன்கொடையாளர்கள் பெயர்களை இதுவரை வெளியிடவில்லை வெளிப்படைத்தன்மை இல்லாத பிஎம் கேர்ஸ் திட்டம்: காங்கிரஸ்  பொது செயலாளர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று டிவிட்டரில் பதிவிடுகையில்,தேர்தல் பத்திர திட்டத்தில் முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன. இது போன்ற திட்டங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாதது தனது விருப்பம் போல் நிதியை செலவழிப்பதற்கு மோடிக்கு வசதியாக அமைந்துள்ளது. மோடி அரசால் உருவாக்கப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

கொரோனா பெருந்தொற்றின்போது அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மோடியால் பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் நிதி தொடங்கப்பட்டது. தனியார் நிறுவனங்களிடம் இருந்து மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபடுவதற்கு தொடங்கப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை போல் நிறுவனங்களிடம் நிதி பெறுவதற்காக இன்னொரு வழியை அரசு திறந்து விட்டுள்ளது. பிஎம் கேர்ஸ் நிதிக்காக பெற்ற மொத்த நிதி மற்றும் நன்கொடையாளர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

குறைந்தபட்சம் ரூ. 12,700 கோடி நன்கொடைகளைப் பெற்றுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்களின் மூலம் தெரியவருகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி, அதானி(ரூ/.100 கோடி), பேடிஎம்(ரூ.500 கோடி),ஜேஎஸ்டபிள்யூ(ரூ.100 கோடி) நிதி அளிப்பதாக பொதுவௌியில் உறுதி அளித்துள்ளன. இதற்கு ஒன்றிய கணக்கு தணிக்கை மற்றும் ஆர்டிஐ சட்டங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 38 பொது துறை நிறுவனங்கள் ரூ.2105 கோடி நிதி அளித்துள்ளன.

பொதுதுறை நிறுவன ஊழியர்கள் அமைப்புகளிடம் இருந்து மேலும் 150 கோடி வந்துள்ளன.இந்திய நிலம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் சீனாவுடன் பிரச்னை இருக்கும் நிலையில், அங்கு இயங்கி வரும் டிக்டாக்,ஷாவ்மி போன்ற நிறுவனங்களும் பல கோடி நிதி வழங்கியுள்ளன. இந்த நிதி தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆன பிறகும், இதில் எவ்வளவு தொகை திரட்டப்பட்டுள்ளது. யார்,யார் நன்கொடை அளித்துள்ளனர் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.வழக்கம் போல் பிஎம் கேர்ஸ் நிர்வாக முறையிலும் எந்த ஒரு வெளிப்படைத்தன்மை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

The post நன்கொடையாளர்கள் பெயர்களை இதுவரை வெளியிடவில்லை வெளிப்படைத்தன்மை இல்லாத பிஎம் கேர்ஸ் திட்டம்: காங்கிரஸ்  பொது செயலாளர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: