மயிலாடி ஆலடிவிளையில் அட்மா திட்ட பயிற்சி

அஞ்சுகிராமம், மார்ச் 19: அகஸ்தீஸ்வரம் வட்டாரம் மயிலாடி ஆலடிவிளை கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், அட்மா திட்டத்தின் கீழ் பண்ணைப் பள்ளி நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்னும் தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் சுனில்தத் தலைமை வகித்து நிலம் தயாரித்தல், முதல் உழவு, மண் வள மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரின்ஸ் ஜெயசிங் மண் வளம் அறிந்து விதைப்பதன் நன்மைகள் பற்றி எடுத்துரைத்தார். தோவாளை மண் ஆராய்ச்சி நிலைய வேளாண்மை அலுவலர் ஜெகன் மண் ஆய்வு மற்றும் மண் மாதிரி சேகரிக்கும் முறை பற்றி செய்முறை விளக்கமளித்தார். இப்பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜெயகுமாரி, சிந்துஜா மற்றும் நெல் விவசாயிகள் 25 பேர் கலந்து கொண்டனர்.

The post மயிலாடி ஆலடிவிளையில் அட்மா திட்ட பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: