மகளிர் பிரீமியர் லீக்கில் இன்று `கிளைமாக்ஸ்’; டெல்லி-பெங்களூரு பைனலில் பலப்பரீட்சை: பட்டத்துடன் ₹6 கோடி பரிசு யாருக்கு?

புதுடெல்லி: 5 அணிகள் பங்கேற்ற 2வது மகளிர் பிரீமியர் லீக் டி.20 தொடரில் இன்று கிளைமாக்ஸ் அரங்கேறுகிறது. டெல்லியில் இன்று இரவு 7.30 மணிக்கு இறுதிபோட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதுகின்றன. டெல்லி, லீக் சுற்றில் முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது. கேப்டன் மெக்லானிங் 308, ஷபாலி வர்மா 265, ஜெமிமா 235 ரன் விளாசி பார்மில் உள்ளனர். பவுலிங்கில் மரிஜானா காப், ஜெஸ் ஜோசசென் 11, ராதாயாதவ் 10 விக்கெட் வீழ்த்தி உள்ளனர்.

கடந்த முறை பைனலில் மும்பையிடம் தோற்ற டெல்லி இன்று பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது.மறுபுறம் பெங்களூரு அணியில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 269, ரிச்சா கோஷ் 240 ரன் எடுத்துள்ளனர். எலிஸ்பெர்ரி 312 ரன் மற்றும் 7 விக்கெட் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

பைனல் குறித்து ஆர்சிபி கேப்டன் மந்தானா கூறியதாவது: ஐபிஎல் தொடரில் ஆண்கள் அணியில் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை என்பதை தொடர்புபடுத்தி பார்த்து அதிக நெருக்கடியை உருவாக்க விரும்பவில்லை. பைனலில் சிறப்பாக செயல்படுவோம், என்றார்.

இதுவரை இரு அணிகளும் 4 முறை மோதி உள்ளது. இதில் ஒன்றில் கூட பெங்களூரு வென்றது கிடையாது. 4 போட்டியிலும் டெல்லி தான் வென்றுள்ளது. இதற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து இன்று பதிலடி கொடுத்து மகுடம் சூடும் உத்வேகத்தில் ஆர்சிபி உள்ளது. பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடியும், 2வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசு வழங்கப்படுகிறது.

The post மகளிர் பிரீமியர் லீக்கில் இன்று `கிளைமாக்ஸ்’; டெல்லி-பெங்களூரு பைனலில் பலப்பரீட்சை: பட்டத்துடன் ₹6 கோடி பரிசு யாருக்கு? appeared first on Dinakaran.

Related Stories: