மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா: காப்புக்கட்டுதலுடன் துவக்கம்

மானாமதுரை, மார்ச் 17: மானாமதுரை சிவகங்கை மெயின்ரோட்டில் தயாபுரம் பஸ்ஸ்டாப் அருகே உள்ளது முத்துமாரியம்மன் கோயில். இக்கோயிலில் நேற்றுமுன்தினம் பங்குனித்திருவிழா காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகங்கள் நடந்தது. அதன்பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காப்புக்கட்டுதல் நடந்தது. பூக்குழி இறங்குபவர்கள், அக்னிசட்டி, பால்குடம் எடுப்பவர்கள், அலகு குத்துபவர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்த கோயில் பூசாரியிடம் காப்புக்கட்டிக்கொண்டு விரதத்தை துவங்கினர்.

வரும் 22ம் தேதி பொங்கல் விழாவில் மானாமதுரை வைகை ஆற்றில் கரகம் எடுத்து ஊர்வலமாக பால்குடம், அக்னிசட்டி, அலகு குத்துதல் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கோயில் முன்பு அமைக்கப்பட உள்ள அக்னிகுண்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்ட்டிகள் சுப்பிரமணியன், நாகராஜன், முருகன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

The post மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா: காப்புக்கட்டுதலுடன் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: