வேலூர் பாகாயம் சாலை சந்திப்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஓவியம் வரைந்து அசத்திய கல்லூரி மாணவி

*கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் பங்கேற்பு

வேலூர் : நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்ற நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர் அரசினர் முத்துரங்கம் கலைக்கல்லூரி முதுநிலை மாணவி ஷர்மிளா, வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம், ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது, மதிப்புமிக்க வாக்குரிமையை பணத்துக்காக விற்கக்கூடாது, ஓட்டளிப்பது நமது உரிமை, உங்கள் வாக்கு, உங்கள் குரல் போன்றவற்றை வலியுறுத்தும் வகையில் பிரமாண்டமான ஓவியத்தை வேலூர் பாகாயம் சாட் மருத்துவமனை அருகில் நான்கு சாலைகள் சந்திக்கும் மையப்பகுதியில் வரைந்தார்.

ஓவியம் வரையும் பணியை காலை 9 மணிக்கு துவங்கி காலை 11 மணிக்கு ஓவியம் வரையும் பணியை நிறைவு செய்தார். இவரது இப்பணியை கல்லூரி முதல்வர் மலர் வாழ்த்தி பாராட்டினார். அவரை தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஓவியம் வரைந்த மாணவியை பாராட்டினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் தமிழ்செல்வன், மோகனலட்சுமிகா, சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

The post வேலூர் பாகாயம் சாலை சந்திப்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஓவியம் வரைந்து அசத்திய கல்லூரி மாணவி appeared first on Dinakaran.

Related Stories: