கால்நடை மருத்துவ முகாம்

 

திருப்பூர், மார்ச்16: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி என்எஸ்எஸ் சார்பில் கருமாபாளையத்தில் ஏழு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. கருமாபாளையம் பால் உற்பத்தி கூட்டுறவு சங்க செயலாளர் பழனிச்சாமி முகாமிற்கு தலைமை வகித்து துவக்கி வைத்தார். என்எஸ்எஸ் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கால்நடை மருத்துவர்கள் கோபால், லோகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பிறகு, தேனி வளர்ப்பு பயிற்சி பட்டறை அளிக்கப்பட்டது.முகாமில் சிறப்பு விருந்தினராக டெல்லி தேசிய ஊட்டச்சத்து ஆரோக்கிய நல வாரியம் போன்ற பல அரசு விருதுகளை பெற்ற தேசிய தேனீக்கள் வாரியம் உறுப்பினர் மஞ்சுளா மற்றும் ஜவஹர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு தேனீக்களை வளர்க்கும் முறைகள், சந்தைபடுத்துதல் போன்ற பயிற்சியினை அளித்தனர். பிறகு மாணவ, மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து தலைவர் பூங்கொடி சக்திவேல், துணைத் தலைவர் சண்முகசுந்தரம், கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

The post கால்நடை மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: