கேஎம்சிஹெச் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச புற்றுநோய் சிகிச்சை மையம் துவக்கம்

 

கோவை, மார்ச் 16: பொருளாதார நிலையின் காரணமாக புற்றுநோய்க்கு முறையான சிகிச்சை பெற இயலாத நிலையில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சை வசதிகள் அளிக்கும் பொருட்டு கேஎம்சிஹெச் மருத்துவமனையானது, ரோட்டரி கிளப் ஆப் மான்செஸ்டர், கோயமுத்தூர் மற்றும் வேவிகில் டேட்டா சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து ‘‘பிராஜக்ட் ரெய்ஸ் ஆப் ஹோப்’’ என்ற திட்டத்தை கேஎம்சிஹெச் மருத்துவக்கல்லுாரி பொது மருத்துவமனையில் நேற்று துவக்கியுள்ளது.

நிகழ்ச்சிக்கு கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி மற்றும் எம்எம் கியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ரோட்டரியன் மயில்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். குணமாகக்கூடிய வாய்ப்பு இருந்தும் நிதி நிலைமையின் காரணமாக புற்று நோய்க்கு முறையான மருத்துவம் பெற வசதியில்லாத குழந்தைகள் இங்கு இலவசமாக சிகிச்சை பெறலாம். கேஎம்சிஹெச் துணை தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி, ரோட்டரி மாவட்ட இயக்குனர் ரோட்டரியன் கோகுல்ராஜ், துணை கவர்னர் ரோட்டரியன் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post கேஎம்சிஹெச் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச புற்றுநோய் சிகிச்சை மையம் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: