தோனிக்கு பேட்டிங் பிரச்னையில்லை… கீப்பிங்தான்! ராபின் உத்தப்பா பேட்டி

சென்னை: சிஎஸ்கே அணிக்கு 6வது முறையாக சாம்பியன் பட்டம் வாங்கி தர வேண்டும் என்ற முனைப்புடன் தனது 42 வயதில் டோனி களமிறங்குகிறார். டோனிக்கு கடந்த சீசனில் முட்டி பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் வலியால் அவதிப்பட்ட டோனி, தற்போது அறுவை சிகிச்சை செய்து மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பி இருக்கிறார். இதுகுறித்து சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறியதாவது: டோனி சக்கர நாற்காலியில் அமர்ந்து இருந்தாலும் அவரை சிஎஸ்கே அணி விளையாட அனுமதிக்கும்.

நாற்காலியில் இருந்து எழுந்து பேட்டிங் சென்று வா என்று சிஎஸ்கே அணி கூறும். ஆனால் தற்போது டோனிக்கு பேட்டிங் செய்வதில் சிரமம் கிடையாது. அவருக்கு என்றுமே பேட்டிங் சிக்கலாக இருக்காது. தற்போது பிரச்சினையே அவருடைய விக்கெட் கீப்பிங் தான். ஏனென்றால் அவரது முட்டி பகுதியில் தேய்மானம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அவர் அதையும் மீறி விக்கெட் கீப்பிங் செய்வார். ஒருவேளை தம்மால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாது என்ற ஒரு நிலை வந்தால் அவர் போட்டியிலிருந்து விலகிவிடும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தோனிக்கு பேட்டிங் பிரச்னையில்லை… கீப்பிங்தான்! ராபின் உத்தப்பா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: