முனியப்பசாமி கோயில் விழாவில் எருதுகட்டு

 

கமுதி, மார்ச் 14: கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் கழுகூரணி முனியப்பசாமி கோயில் மாசிக் களரி திருவிழாவை முன்னிட்டு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் எருதுகட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், பம்மனேந்தல் கிராம ஊரணியை மைதானமாக்கி நடுவில் உரல் புதைத்து அதில் வடம் கட்டி ஒவ்வொரு மாடாக மைதானத்தில் கயிறு கட்டி 14 காளைகள் அவிழ்க்கப்பட்டது. ஒவ்வொரு காளையை அடக்க 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த காளைகளை அடக்க 9 வீரர்கள் அடங்கிய மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த வடமாடு எருதுகட்டு விழாவிற்கு கமுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் மதுரை,விருதுநகர், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் வந்திருந்தன. இந்த எருது கட்டு விழாவை பெண்கள், சிறுவர்கள்,முதியோர் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். வெற்றி பெற்ற காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு குத்து விளக்கு மற்றும் அண்டா பரிசாக வழங்கபட்டது.

The post முனியப்பசாமி கோயில் விழாவில் எருதுகட்டு appeared first on Dinakaran.

Related Stories: