தேர்தல் ஆணையர் நியமனத்திற்கு தடைகோரிய வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் நாள் மறுநாள் விசாரணை..!!

டெல்லி: தேர்தல் ஆணையர் நியமன வழக்கு நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தலைமை தேர்தல் ஆணையத்தில் மூன்று பேர் ஆணையர்களாக இருப்பார்கள். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் உள்ளார். தேர்தல் ஆணையர் ஒருவர் கடந்த மாதம் ஓய்வு பெற்ற நிலையில், மற்றொரு ஆணையரான அருண் கோயல் கடந்த 9ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் காலியாக இருக்கும் இரண்டு ஆணையர்களின் பதவியை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தற்போதைய புதிய சட்டத்தின் அடிப்படையில் நியமனம் செய்ய ஒன்றிய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் 2023 நீதிமன்ற உத்தரவுப்படி, தலைமை நீதிபதியையும் தேர்வு குழுவில் இடம்பெற செய்து ஆணையர்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், புதிய ஆணைய சட்டப் பிரிவுகள் 7,8ன் கீழ் தேர்தல் ஆணையர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும். கட்சி சார்பற்ற தேர்தல் ஆணையர்களை நியமிக்க ஏதுவாக உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த மனுவை நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

The post தேர்தல் ஆணையர் நியமனத்திற்கு தடைகோரிய வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் நாள் மறுநாள் விசாரணை..!! appeared first on Dinakaran.

Related Stories: