அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ நேரில் ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 13: பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார கிராமப்புறங்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு சிகிச்சைகளுக்காக வந்துசெல்கின்றனர். இந்நிலையில் நேற்று பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, அரசு மருத்துவமனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் நோயாளிகளிடம் மருத்துவர்கள் வழங்கும் கிசிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அவருடன் ஒன்றிய செயலாளர்கள் சேகர், விஸ்வநாதன், நகர செயலாளர் தென்னரசு மற்றும் கட்சினர் உடனிருந்தனர்.

The post அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: