கன்னியாகுமரி இரையுமன்துறை மீன் இறங்குதளத்தினை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள ரூ.33.75 கோடி ஒதுக்கீடு; அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 05.04.2023 அன்று நடைபெற்ற 2023-2024-ஆம் நிதி ஆண்டிற்கான கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானியக் கோரிக்கையின்போது மாண்புமிகு அமைச்சர் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை) அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், இரையுமன்துறை மீன் இறங்குதளத்தினை தூண்டில் வளைவுகளுடன் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்டம், இரையுமன்துறை மீன் இறங்குதளத்தினை தூண்டில் வளைவுகளுடன் மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள ரூ.33.75 கோடி தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (NABARD-RIDF) திட்டத்தின் கீழ் நிருவாக ஒப்புதல் அளித்து அரசு 11.03.2024 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

The post கன்னியாகுமரி இரையுமன்துறை மீன் இறங்குதளத்தினை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள ரூ.33.75 கோடி ஒதுக்கீடு; அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: