இந்தி பேசும் இந்துக்களுக்கு ஒரு நீதி? தமிழ் பேசும் இந்துக்களுக்கு ஒரு நீதியா? :செல்வப்பெருந்தகை காட்டம்

சென்னை : இந்தி பேசும் இந்துக்களுக்கு ஒரு நீதி? தமிழ் பேசும் இந்துக்களுக்கு ஒரு நீதியா? என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் 4 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரவு அமல்படுத்தப்பட்டது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டு இருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்த்தன; அதிமுக மட்டுமே ஆதரித்தது. சி.ஏ.ஏ. சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக பதில் சொல்ல வேண்டும். பா.ஜ.க. வேட்பாளர்கள் பலர் தேர்தலில் போட்டியிடாமல் விலகி வருகின்றனர். தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்பும் விதமாக சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். சி.ஏ.ஏ. சட்டத்தில் இலங்கை தமிழர்களை ஏன் சேர்க்கவில்லை என தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். மோடி ஆட்சி தமிழர்களுக்கு எதிரான ஆட்சியா?. இலங்கை தமிழர்களுக்கு ஓரவஞ்சனை காட்டுகிறது ஒன்றிய பாஜக அரசு,”இவ்வாறு தெரிவித்தார்.

The post இந்தி பேசும் இந்துக்களுக்கு ஒரு நீதி? தமிழ் பேசும் இந்துக்களுக்கு ஒரு நீதியா? :செல்வப்பெருந்தகை காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: