சில்லி பாய்ன்ட்…

* அமெரிக்காவில் நடக்கும் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட டென்மார்க் நட்சத்திரம் கரோலின் வோஸ்னியாக்கி தகுதி பெற்றார். 3வது சுற்றில் அமெரிக்காவின் கேத்தி வோலிநெட்சுடன் மோதிய வோஸ்னியாக்கி 6-2, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் வென்றார். பாவ்லியுசென்கோவா (ரஷ்யா), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), அனஸ்டேசியா போடபோவா (ரஷ்யா), யூலியா புடின்ட்சேவா (கஜகஸ்தான்), இகா ஸ்வியாடெக் (போலந்து) ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
* ஒடிசாவில் நடைபெற்ற கேலோ இந்தியா தேசிய மகளிர் லீக் டேக்வாண்டோ போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆர். ரோஷினி தங்கப்பதக்கமும், சக்தி பிரசன்னா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
* கார் விபத்துக்குப் பிறகு நீண்ட ஓய்வில் இருந்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் முழு உடல்தகுதியுடன் மீண்டும் களமிறங்கத் தயாராகி உள்ள நிலையில், அவர் விக்கெட் கீப்பராகவும் செயல்படத் தயாராக இருந்தால் ஐசிசி உலக கோப்பை டி20 தொடரிலும் விளையாடலாம் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
* கணுக்கால் காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி முழு உடல்தகுதி பெற இன்னும் 6 மாத காலம் ஆகும் என்பதால், உலக கோப்பை டி20 தொடரில் அவர் களமிறங்கும் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Related Stories: