சிவசேனை, தேசியவாத காங். பிரச்சனையில் தலைமைத் தேர்தல் ஆணையரின் முடிவுகளே அருண் கோயல் பதவி விலக காரணம்?

புதுடெல்லி: நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்து வரும் தேர்தல் ஆணையம், வரும் 15ம் தேதி மக்களவை தேர்தல் அட்டவணையை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, தேர்தல் ஆணையர் அருண் கோயல் நேற்று முன்தினம் இரவு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருடன் கருத்து வேறுபாட்டால் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றாட நிகழ்வில் ஏற்படும் கருத்து வேறுபாடு மட்டுமின்றி ராஜீவ்குமாரின் வேறு முடிவுகளும் கோயல் விலக காரணமாக கருதப்படுகின்றன.

முன்னதாக சிவசேனை இரண்டாக உடைந்தபோது ஏக்நாத் ஷிண்டே பிரிவே உண்மையான சிவசேனை என்று தீர்ப்பளித்தது ஆணையம். ஏக்நாத் பிரிவுக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் ஆதரவு உள்ளதை மட்டும் கருத்தில் கொண்டு ஆணையம் முடிவு எடுத்தது. முந்தைய நடைமுறைப்படி கட்சியில் அமைப்பு ரீதியாக எந்த பிரிவுக்கு ஆதரவு உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் ஷிண்டேவுக்கு கட்சி அமைப்புகளில் ஆதரவு உள்ளதா என்பதை ஆணையர் பரிசீலிக்காததால் கோயல் அதிருப்தி அடைந்துள்ளார். எம்.பி., எம்எல்ஏக்கள் ஆதரவை மட்டும் கருத்தில் கொண்டு ஷிண்டே தரப்புக்கு கட்சி பெயர், சின்னத்தை தந்தது ஆணையம் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசியவாத காங். கட்சியை அஜித்பவார் உடைத்து சென்ற பிரச்சனையிலும் ஆணையம் எடுத்த முடிவுக்கு கோயல் அதிருப்தி அடைந்தார். தேசியவாத காங். எம்எல்ஏ, எம்.பி.க்களில் ஆதரவு யாருக்கு அதிகம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டது ஆணையம்.கட்சி அமைப்பில் யாருக்கு அதிக ஆதரவு என்பதை தலைமை தேர்தல் ஆணையர் கருத்தில் கொள்ளாததால் கோயல் அதிருப்தி அடைந்தார். அஜித்பவாருக்கு எம்எல்ஏக்கள், எம்.பி.க்களில் அதிக ஆதரவு உள்ளதால் அவருக்கே கட்சி பெயரும் சின்னமும் ஒதுக்கப்பட்டது.சிவசேனை உடைந்தபோது எடுத்த முடிவையே, தேசியவாத காங். பிளவுண்டபோதும் தேர்தல் ஆணையம் எடுத்ததால் கோயல் அதிருப்தி அடைந்தார்.

The post சிவசேனை, தேசியவாத காங். பிரச்சனையில் தலைமைத் தேர்தல் ஆணையரின் முடிவுகளே அருண் கோயல் பதவி விலக காரணம்? appeared first on Dinakaran.

Related Stories: