கலை பண்பாட்டுத்துறை பண்பாட்டு மையம் சார்பில் இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள்: 60 பேர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்

 

கரூர், மார்ச்11: கரூரில்கலை பண்பாட்டுத்துறை மண்டலக் கலை பண்பாட்டு மையம் சார்பில் இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடைபெற்றது.கரூரில் கலைப் பண்பாட்டுத்துறை மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் கரூர் ஜவஹர் பஜாரில் அமைந்துள்ள இசைப் பள்ளியில் இசை பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி தலைமையில் நடைபெற்றது.மாவட்ட அளவிலான இப்போட்டியில் பரதநாட்டியம், நாதஸ்வரம், மிருதங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் நடைபெற்றது. 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.

கரூர் மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில், இளம் கலைஞர்களுக்கான, இரண்டு நாள் கலை போட்டிகள், மாவட்ட இசை பள்ளியில் நேற்று தொடங்கியது. கடந்த 2 நாளில் 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு குரலிசை போட்டி, நாதஸ்வரம், மிருதங்கம் உள்ளிட்ட கருவியிசை போட்டி, பரத நாட்டிய போட்டிகள், ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில், 17 முதல் 35 வயது வரை உள்ள 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதனை நடுவர்கள் பார்வையிட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் 3 இடங்களை தேர்வு செய்தனர். மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.6,000 , இரண்டாம் பரிசாக ரூ.4,500, மூன்றாவது பரிசாக ரூ.3,500 வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் தேர்ச்சி பெறுபவர்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

The post கலை பண்பாட்டுத்துறை பண்பாட்டு மையம் சார்பில் இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள்: 60 பேர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர் appeared first on Dinakaran.

Related Stories: