ஆர்.கே.பேட்டை அருகே புதர்மண்டி கிடக்கும் பெரியநாகபூண்டி குளம்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை

 

பள்ளிப்பட்டு, மார்ச் 11: பெரியநாகபூண்டியில் புதர்மண்டி கிடக்கும் குளத்தை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பெரியநாகபூண்டி காலனி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய குளம் பல ஆண்டுகளாக சீரமைக்காததால், புதர்மண்டி குளத்தை சுற்றி ஏராளமான முட்செடிகள் அடர்த்தியாக வளர்ந்து குளம் முழுவதும் ஆகாயத்தாமரை நிறைந்தும், கோரைபுற்கள் வளர்ந்தும் காணப்படுகிறது.

மேலும் அங்கு அப்பகுதி பொதுமக்கள் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால், குளத்தில் மழைநீர் மாசடைந்து நிலத்தடி நீர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்கவும், சுத்தமான குடிநீர் கிடைக்கும் வகையில் குளத்தை சுற்றி முள் செடிகள் அகற்றி குளம் முழுவதும் வளர்ந்துள்ள ஆகாரத்தாமரை, கோரைபுற்களை அகற்றி, தூர்வாரி ஆழப்படுத்தி குளக்கரை சுற்றி கம்பி வேலி, மின் விளக்குகள், இருக்கைகள், பொதுமக்கள் நடை பயிற்சிக்கு நடைமேடை அமைத்து தர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

The post ஆர்.கே.பேட்டை அருகே புதர்மண்டி கிடக்கும் பெரியநாகபூண்டி குளம்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: