பாக். அதிபராக சர்தாரி 2வது முறையாக தேர்வு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபராக ஆசிப் அலி சர்தாரி 2 வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காததால் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(என்) மற்றும் பாக். மக்கள் கட்சி ஆகியவை இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. நாட்டின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் பதவியேற்றார். இந்நிலையில், அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் ஆளும் கட்சி கூட்டணியின் வேட்பாளராக பாக்.

மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி சர்தாரியும், எதிர்க்கட்சி வேட்பாளராக மஹ்மூத் கான் அச்சக்ஸாய் ஆகியோர் போட்டியிட்டனர். அந்த நாட்டின் அரசியலமைப்பு விதியின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள்,4 மாகாண சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களித்தனர். இதில்,255 வாக்குகள் பெற்று சர்தாரி வெற்றி பெற்றார். எதிர்கட்சி வேட்பாளருக்க 119 வாக்குகளே கிடைத்தன. இதன் மூலம் பாகிஸ்தானின் 14வது அதிபராக சர்தாரி பதவியேற்க உள்ளார். ஆசிப் அலி ஏற்கனவே 008 முதல் 2013 வரை அதிபராக இருந்துள்ளார் .

The post பாக். அதிபராக சர்தாரி 2வது முறையாக தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: