ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்டார்

சென்னை: ஆதிதிராவிடஎழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்களை அமைச்சர்.கயல்விழி செல்வராஜ் வெளியிட்டார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் 2022-23ம் ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர் 11 பேரை தேர்வு செய்து, அவர்களின் படைப்புகளை நூல்களாக வெளியீடு செய்வதற்கு முதல் தவணை நிதி உதவியாக தலா ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.5,50,000 காசோலையாக வழங்கப்பட்டது.

இந்த சமூகங்கள் தொடர்பான கலை, பண்பாடு, கலாச்சாரம், இலக்கியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் சிறந்த எழுத்தாளர்களின் தமிழ் படைப்புகள் உலக அளவில் வசிக்கும் மக்களை சென்று அடைந்திடும் வகையிலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் என 2023-24ம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக்கோரிக்கையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி 4 சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நூல்களை வெளியிட துறை செயலாளர் லட்சுமி பிரியா பெற்றுக்கொண்டார். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணிபுரிந்து பணியிடையில் காலமான அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 11 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நல இயக்குநர் ஆனந்த், பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை மற்றும் எழுத்தாளர்கள் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Related Stories: