கடல் சார்ந்த பல்லுயிர்கள், பவளப்பாறைகளை பாதுகாக்க கடல்சார் உயர் இலக்குபடை உருவாக்கம்: அமைச்சர் மதிவேந்தன் பேட்டி

சென்னை: கடல் சார்ந்த பல்லுயிர்கள், பவளப்பாறைகளை பாதுகாக்க கடல்சார் உயர் இலக்குபடை உருவாக்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மன்னார் வளைகுடா, பாக் வளைகுடாவில் பல்லுயிர்களை பாதுகாக்க அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ராமநாதபுர மாவட்டத்தில் இந்த அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளுக்கு கூடுதலாக பல்வேறு விதத்தில் பணியை செய்வதற்காக இரண்டு படகுகளையும், வயர்லெஸ் கம்யூனிகேஷனையும் அந்த அமைப்புக்கு வழங்கியுள்ளோம்.

இதன் மூலமாக 12 பேர் கொண்ட அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உள்ளனர். பல்லுயிர்கள் பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாமல், இது தொடர்பான குற்றங்களும் தடுக்கப்படும். கோடை காலத்தில் வனப்பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மற்ற கடல் சார்ந்த மாவட்டங்களிலும் கடல்சார் உயர் இலக்குபடை விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

The post கடல் சார்ந்த பல்லுயிர்கள், பவளப்பாறைகளை பாதுகாக்க கடல்சார் உயர் இலக்குபடை உருவாக்கம்: அமைச்சர் மதிவேந்தன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: