வேளாங்கன்னியில் ஜமாஅத் நிர்வாகத்தால் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 7 குடும்பத்தினர்: சுப துக்க நிகழ்ச்சிகளில் ஒதுக்குவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்

நாகை: நாகை மாவட்டம் வேளாங்கன்னியில் ஜமாஅத் நிர்வாகத்தால் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 7 குடும்பத்தினர் சுப துக்க நிகழ்ச்சிகளில் ஒதுக்குவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். வேளாங்கண்ணி முஸ்லீம் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் ஜமாஅத் நிர்வாகத்தின் கட்டமைப்பில் உள்ள ஷேக்தாவுத் என்பவர் ஜமாஅத் நிர்வாகத்திற்கு தெரியாமல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த ஜமாஅத் நிர்வாகம் அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஷேக்தாவுத்தின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஜமாஅத் நிர்வாகத்திடம் கேட்ட போது அவர்களையும் ஜமாஅத் நிர்வாகம் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளது. ஆனால் ஜமாஅத் நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடு குறித்து தட்டிக்கேட்டதற்காகவே ஊரைவிட்டு தள்ளி வைத்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கூறப்படுகிறது.

காவல் துறையினரிடம் இரு தரப்பினர் அளித்த புகாரை அடுத்து கீழ் வேலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது அப்போது அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையிலேயே இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ஜமாஅத் நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் நகை மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீசை நீரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். சுப துக்க நிகழ்ச்சிகளில் ஒதுக்குவதாகவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

 

The post வேளாங்கன்னியில் ஜமாஅத் நிர்வாகத்தால் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 7 குடும்பத்தினர்: சுப துக்க நிகழ்ச்சிகளில் ஒதுக்குவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் appeared first on Dinakaran.

Related Stories: