பாஜக கூட்டணியை முறித்துக் கொள்வதாக கடந்த செப்டம்பர் மாதம் அதிமுக அறிவித்திருந்தது. ஆனால் அதிமுக அறிவித்தாலும் தற்போது வரை பாஜக அதிகாரப்பூர்வமாக கூட்டணி முறிவை அறிவிக்கவில்லை. மக்களவை தேர்தலுக்கு முன்பு மீண்டும் அதிமுகவுடன் கூட்டணியை புதுப்பிக்க பாஜக முயற்சி செய்வதாக தகவல் வெளியானது. தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே இருந்த தெலுங்குதேசம், பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்க பாஜக பேச்சு வார்த்தை நடத்த வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் அதிமுகவுடன் கூட்டணி புதுப்பிக்க பாஜக தீவிரமாக முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post மக்களவைத் தேர்தல்.. பாஜக – அதிமுக கூட்டணியை முறித்துக் கொள்வதாக எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!! appeared first on Dinakaran.